உயர்த்தப்பட்ட சொத்து வரி தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவிப்பு

சென்னை: சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறி இருக்கிறார்.
கடந்தாண்டில் சென்னை உள்பட அனைத்து நகரங்களுக்கும் சொத்து வரி 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இது குறித்து புகார்கள் எழுந்தன.


இந் நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:
உள்ளாட்சி அமைப்புகளில் உயர்ததப்பட்ட சொத்துவரியை குறைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையிலான இக்குழுவில், நகராட்சி நிர்வாக ஆணையர், பேருராட்சி இயக்குநர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


இந்த குழு மறுபரிசீலனை முடியும் வரை, 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு முந்தைய சொத்து வரியை செலுத்தினால் போதும். கூடுதலதாக செலுத்தப்பட்ட வரி அடுத்தாண்டு ஈடு செய்யப்படும். சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதற்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்றார்.

You may have missed