சர்ச்சை இயக்குனர் திகில் பட இரண்டாம் பாகம் இயக்க முடிவு..

யக்குனர் ராம் கோபால் வர்மா என்ற டிரேட் மார்க்குடன் அவரது படங்கள் வெளிவரும் வரவேற்பும் பெறும். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அவர் படங்கள் இயக்குவார். சிவா, ரங்கீலா, ரத்தசரித்திரம் என அவரது பல படங்கள் இன்றைக்கும் பேசக்கூடிய படங்கள் ஆகும். 2003ம் ஆண்டு பூத் என்ற திகில் படத்தை இந்தியில் இயக்கினார். அஜய் தேவகன், ஊர்மிளா நடித்திருந்தனர்.


சமீபகாலமாக வர்மா படங்களில் கவனம் செலுத்தாமல் இணைய தளத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். அதிலும் பிரபல நடிகர்கள், நடிகைகள், அரசியல் வாதிகளை நய்யாண்டி செய்து பொழுதை கழிக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பூத் படத்தின் இரண்டாம் பாகம் இயக்க உள்ளதாக தெரிவித்திருக் கிறார். அப்படத்துக்கு பியர் என்கிற பயம் என பெயரிட உள்ளதாக தெரி வித்திருக் கிறார். வர்மாவின் இதுபோன்ற அறிவிப் புகள் அவ்வப்போது வந்தாலும் அந்த படங்களை ஆரம்பித்ததாகத்தான் தகவல் இல்லை.