வர்மா இயக்கும் அடுத்த 2 படமும் ஒடிடியில்தான் ரிலீஸ்..

திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ’நேக்கட்’ திரைப்படம் ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க் கையை பற்றிய கதையை அலசுகிறது
https://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்கட் படத்தை காணலாம். இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.
படைப்பளிகள் மெம்படுத்தப்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஆர்எம், நெறிப்படுத்தப் பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட உள்ளடக்க விநியோகம் மற்றும் நிகழ் நேர பரிவர்த்தனைகளில் 100% வெளிப் படைத்தன்மை ஆகியவற்றிலிருந்து அவர்கள் பயனடைகிறார்கள். பைரசியை தடுக்கவும் இந்த தொழில் நுட்பம் உதவுகிறது.
ராம் கோபால் வர்மா மற்றும் அவரது குழுவினர் இந்த டிஜிட்டல் ப்ளாக் பஸ்டரின் வெற்றியின் மூலம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அவர் களின் அடுத்த படமான கொரோனா வைரஸ் படத்தையும் வெளியிட திட்ட மிட்டு வருகிறார்கள்.
நேக்கட் படம் வெளியீட்டுக்குப் பிறகு, பல தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை the-ally.com ஈர்த்துள்ளது. அவர்கள் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்ற, ஊரடங்கு காரண மாக தியேட்டர்களிலிருந்து விரைவாக எடுக்கப்பட்ட தங்களின் புதிய படங் களை மறுவெளியீடு செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அவற்றில் அதர்வாவின் செம்ம போத ஆகாத, கிஷோரின் திலகர், துருவாவின் காதல் கசக்குதய்யா, போஸ் வெங்கட் டின் கன்னிமாடம் ஆகிய படங்கள் மறுவெளியீட்டுக்கு தயாராக உள்ளன. அதே நேரத்தில் தேவதாஸ், கள்ளன், மங்கி டாங்கி போன்ற புதிய படங் களும் the-ally.comல் விரைவில் வெளி யாகின்றன.
#

கார்ட்டூன் கேலரி