சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை கோரும் நடிகை ரியா…..!

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை செய்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது.

மன அழுத்தம் காரணமாக தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதுதான் உண்மையான காரணமா என்பது பற்றி மும்பை பாந்த்ரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுமார் 29 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளனர். சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், நடிகையும் சுஷாந்த் சிங்கின் காதலியுமான ரியா சக்கரவர்த்தியும், சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கங்களில் சுஷாந்த் சிங் சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோ ஒன்றைப் பதிவு செய்துள்ள ரியா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டேக் செய்து இந்தக் கோரிக்கையை வைத்துள்ளார்.

இதற்கு பல நெட்டிசன்கள் அவரை திட்டிப் பதிவிட்டுள்ளனர். நடிகர் சுஷாந்த் சிங் மறைந்து ஒரு மாதத்துக்குப் பிறகு ஏன் இந்த நாடகம் என்றும் அனுதாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஏன் இப்படியெல்லாம் போலியாக பதிவிடுகிறீர்கள் என்றும் சிலர் கூறியுள்ளனர்.