போதை மருந்து விவகாரத்தில் கைதான ரியா ஜாமீன் மனு திட்டம் தள்ளி வைப்பு..

ந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட் டுகள் சுமத்தப்பட்டன. சுஷாந்துக்கு போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டினார். அவரது கணக்கிலிருந்து ரூ 15 கோடி அபேஸ் ஆகி இருக்கிறது என புகார்கள் எழுந்தன.
போதை மருந்து விவகாரத்தில் ரியா அவரது சகோதரர் மற்றும் மேலாளர் உள்ளிட்ட சிலரை போதை மருந்து தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய் தனர். மும்பை பைகுல்லா சிறையில் ரியா அடைக்கப்பட்டார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின் றனர். இதில் அதிர்ச்சி தகவல்களை அவர் வெளியிட்டு வருகிறார்.


நடிகை ரகுல் பிரித் சிங், சாரா அலிகான் மற்றும் முக்கிய பிரபலங்கள் என 21 பேர்கள் பற்றி போதை மருந்து பயன் படுத்திதாக தனது வாக்கு மூலத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என கூறப் படுகிறது.
சில தினங்களுக்கு முன் ரியா மற்றும் உடன் கைதானவர்கள் ஜாமீன் கேட்டு செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதை நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. வரும் செப்டம்பர் 22ம் தேதி வரை அவர்களை காவலில் வைக்க கோட்டு உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில் ரியா தரப்பில் ஜாமீன் கேட்டு இன்று மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் உடனடியாக ஜாமீன் தாக்கல் செய்யப்போவதில்லை என்று ரியா தரப்பு தெரிவித்திருக்கிறது.