கவுகாத்தி:

அஸ்ஸாம் காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில் 2,413 ஒற்றை கொம்புடைய காண்டாமிருகங்கள் இருப்பதாக 2018 கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. இது 2015ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 12 க £ண்டாமிருகங்கள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து அஸ்ஸாம் வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘793 பெண் காண்டாமிருகங்களுடன் தற்போது 1,641 காண்டாமிருகங்கள் உள்ளன. இதில் 642 ஆண் காண்டாமிருகங்களாகும். 206 காண்ட £மிருகங்களின் பாலினம் கண்டறிய முடியவில்லை. 4 வயதுள்ள காண்டாமிருகங்கள் 387 உள்ளது. இதில் 116 ஆண், 149 பெண், 122 பாலினம் கண்டறிய முடியாத காண்டாமிருகங்களாகும். 385 கன்றுகுட்டிகள் உள்ளன.

கடந்த காலங்களில் வளர்ந்த உயரமான புல் மண்டி கிடந்ததால் காண்டாமிருகங்களின் எண்ணிக்கையை துல்லியமாக அறிய முடியவில்லை. வனப்பகுதியில் உள்ள உயரமான புல்களை எரிப்பது என்பது அத்தியாவசியமாகும். இதன் மூலம் நிலப்பரபுகளில் தாவரங்களை மீள் உருவாக்குதல் செய்யப்படும்.

இந்த முறை உயர் ஈரப்பதம் காரணமாக புல்கள் எரிக்க முடியாமல் போனது. கட்டாயம் 20 சதவீத புல்களை எரித்தாக வேண்டும். இதர உயிரியல் பூங்காக்களில் ஆண்டுதோறும் 60 முதல் 70 சதவீதம் வரை புல்கள் எரிக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காண்டாமிருகங்கள் கணக்கெடுப்பு நடக்கும் உயிரியல் பூங்காக்களில் 2வது இடத்தில் காஸிரங்கா உள்ளது. கவுகாத்தி அருகில் உள்ள போபிதோரா வனஉயிரின காப்பகம் தான் முதலிடமாகும். இங்கு 2012ம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பை விட 102 அதிகரித்துள்ளது. கணக்கெடுப்பு பணி 2006ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

எனினும் திருத்த கணக்கெடுப்பு 2012, 2015ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது. காஸிரங்காவையும் சேர்ந்து அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தம் 2,645 காண்டாமிருகங்கள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. மொத்தம் இந்தியாவில் உள்ள காண்டாமிருகங்களின் எண்ணிக்கையில் இது 90 சதவீதமாகும். மீதமுள்ள காண்டாமிருகங்கள் மேற்குவங்கம் மற்றும் நேபாள் எல்லைப் பகுதியான தேராயில் உள்ளது.