காண்டாமிருகத்தை வேட்டையாட சென்றவரை யானை கொன்றது, சிங்கம் தின்றது: தென் ஆப்பிரிக்காவில் பரிதாபம்

ஜோகன்ஸ்பெர்க்:

காண்டாமிருகத்தை வேட்டையாட சென்ற 5 பேரில் ஒருவர் யானையிடம் சிக்கிக் கொண்டார். யானை கொன்றபின் அவரது உடலை சிங்கங்கள் சாப்பிட்டன.


தென்னாப்பிரிக்க கண்டத்தில் அதிகளவில் காண்டா மிருகங்கள் உள்ளன. உலகில் 80 சதவீத காண்ட மிருகங்கள் தென்னாப்பிரிக்காவில் தான் உள்ளன.

சமீப ஆண்டுகளாக இதனை வேட்டையாடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கடந்த பத்தாண்டுகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காண்டா மிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2018 ல் இதன் எண்ணிக்கை 769 ஆக குறைந்தது. காண்டா மிருகம் அதன் தந்தத்திற்காக வேட்டையாடப்படுகிறது.

இந்நிலையில்,தென்னாப்பிரிக்காவில் குரூகர் தேசிய பூங்காவில் 5 வேட்டைக்காரர்கள் சட்டவிரோதமாக நுழைந்தனர்.

ஒருவரை யானை அடித்துக் கொன்றது. அவரது உடலை மற்ற நால்வரும் தூக்கி வர முயற்சித்தாலும் சிங்கங்கள் சூழ்ந்த நிலையில் இறந்தவரின் உடலை போட்டு விட்டு தப்பியோடிவிட்டனர். சிங்கங்கள் அவரது உடலை தின்றன.

சட்டவிரோதமாக பூங்காவுக்குள் நுழைந்தவர்களிடமிருந்து 375 வேட்டைத் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

இறந்தவரின் உடலை வனத்துறையினர் தேடியபோது, இறந்தவரின் மண்டையோடும் பேண்ட் மட்டுமே கிடைத்துள்ளது.