பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே! : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்  ராகுல்காந்தி குற்றச்சாம்சாட்டியுள்ளார்.

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பரவலாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் விமானங்கள் மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டன.

அந்த காலகட்டத்தில் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கே பணம் இன்றி மக்கள் காலை முதல் நள்ளிரவு வரை வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் நின்று குறைந்த அளவு பணத்தினைப் பெற்றார்கள். இந்த நடவடிக்கையால் பெரும் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டது. தொழில்கள் முடங்கின.

பணம் பெற வங்கி, ஏ.டி.எம். வரிசையில் மணிக்கணக்கின் நின்ற முதியவர்கள் மாண்டனர்.

முன்னறிவுப்பு இன்றி எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கைகளால் நாடு முழுதும் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.

கருப்பு பணத்தின் பயன்பாட்டினை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மத்திய அரசு கூறியது. மேலும் அச்சமயத்தில் சுமார் ரூ. 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாயினை அச்சிட்டது ரிசர்வ் வங்கி.

ஆனால் அதில் 15 லட்சத்து 31 கோடி ரூபாயை மக்கள் மீண்டும் வங்கிகளிலேயே டெபாசிட் செய்திருப்பதாக 2017 – 18ஆம் ஆண்டிற்கான மத்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. மிச்சம் இருக்கும் 13 ஆயிரம் கோடி தான் வங்கிக்கு திரும்பவில்லை என்று கூறியுள்ளது.

“ஆக, வெறும் 13 ஆயிரம் கோடிதான் வங்கிக்கு வரவில்லை. இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதே” என்று பொருளாதார நிபுணர்கள் முதல் சாமானியர்கள் வரை விமர்சிக்கிறார்கள்.

இந்த நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாவது.

“பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்பு பணத்தை நல்ல பணமாக மாற்ற உதவியிருக்கிறது. பணமதிப்பு நீக்கம் என்பது பிழைஅல்ல; அது இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல்

பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்தது பற்றி நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும். மத்திய பாஜக அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே” என்று  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.