Random image

தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது, “ஷகீலா” திரைப்படம்..

 

பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போதே 15 வயதில் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த ஷகீலா, கருவேப்பிலை போலவே கோடம்பாக்கத்தில் பயன் படுத்தப்பட்டார்.

‘வயது வந்தவர்களுக்கு’ மட்டுமான மலையாள சினிமாவில் ஷகீலா நடிக்க ஆரம்பித்த போது, அவர் ‘புகழ்’ இந்தியா முழுக்க பரவ ஆரம்பித்தது.

ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்றை கதைக்கருவாக வைத்து ‘ஷகீலா’ என்ற பெயரிலேயே இந்தியில் திரைப்படம் ஒன்று உருவாகி உள்ளது. ஷகீலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்துள்ளார்.

இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ளார். இவர் ஷகீலா நடித்த படங்களில் உதவியாளராக பணியாற்றிவர்.

கடந்த மார்ச் மாதமே முடிந்து விட்ட இந்த படம் ஊரடங்கு காரணமாக முடங்கி கிடந்தது. ஆரம்பத்தில் ஓ.டி.டி. தளத்தில் இந்த படத்தை திரையிட பேச்சு வார்த்தை நடந்தது.

ஆனால் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்வது என இப்போது முடிவு செய்துள்ளனர். இந்த மாதம் 25 ஆம் தேதி –கிறிஸ்துமஸ் தினத்தன்று ‘ஷகீலா’ வெளியாகிறது.

இதனை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு, புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

“அதிர்ச்சியூட்டும் உண்மைக்கதை” என படத்துக்கு துணை தலைப்பிட்டுள்ளனர்.

– பா. பாரதி