பாலியல் புகார் விவகாரம் : பாயல் கோஷ் மீது நடிகை ரிச்சா சத்தா வழக்கு..

 

இந்தி சினிமா நடிகை பாயல்கோஷ், பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் தெரிவித்ததுடன், மும்பை காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பாயல் கோஷ் அளித்த பேட்டியில், அனுராக்கால் தொந்தரவுக்கு ஆளானோர் பட்டியலில் நடிகை ரிச்சா சத்தா பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரிச்சா, தேவை இல்லாமல் தனது பெயரை அனுராக் காஷ்யப் விவகாரத்தில் தொடர்பு படுத்தி பேட்டி அளித்த பாயலுக்கு, வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் பாயல் மீது, ரிச்சா சத்தா, பம்பாய் உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

-பா.பாரதி.