‘ஷகீலா’ புகழ் ரிச்சா சத்தாவின் அடுத்த படம் – ‘மேடம் சீப்- மினிஸ்டர்’

 

கவர்ச்சி நடிகை ஷகீலாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘ஷகீலா’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர், இந்தி நடிகை ரிச்சா சத்தா.

உத்தரபிரதேச மாநில அரசியலை கதைக்களமாக கொண்டு தயாராகியுள்ள ‘மேடம் சீப்-மினிஸ்டர்’ என்ற படத்தில் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதன் போஸ்டர் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கையில் துடைப்பத்துடன் ரிச்சா சத்தா காட்சி அளிக்கும், இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சாதாரண நிலையில் உள்ள ஒரு பெண் ஆணாதிக்கத்தை முறியடித்து, உயர்ந்த நிலைக்கு வருவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது.

சுபாஷ் கபூர் டைரக்டு செய்துள்ள இந்த படத்தில் அக்ஷய் ஓபராய், சவுரவ் சுக்லா உள்ளிட்டோரும் பிரதான வேடத்தில் நடித்துள்ளனர்.

‘மேடம் சீப் –மினிஸ்டர்’ திரைப்படம் வரும் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஊரடங்கால், பெரிய நடிகர்கள் படம் ஓர் ஆண்டுக்கும் மேலாக வெளிவராத நிலையில் ரிச்சா சத்தாவின் இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் வெளிவருவது, வியப்பான விஷயம்.

‘ஷகீலா’ திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி ரீலீஸ் ஆன நிலையில் ‘மேடம் சீப்- மினிஸ்டர்’ 22 ஆம் தேதி ரிலீஸ்.

– பா. பாரதி