கர்ப்பமாக இருக்கும் நடிகை ரிச்சாவுக்கு குவியும் வாழ்த்துக்கள் !

கடந்த 2011-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான மயக்கம் என்ன படத்தின் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபத்யாய்.

இவர் அமெரிக்காவில் எம்பிஏ படிப்பதற்காக சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கி விட்டார்.

இவர் கல்லூரி படிக்கும் காலத்தில் ஜோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் சென்ற வருடம் இறுதியில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. ரிச்சா தற்போது கணவருடன் அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ரிச்சா வரும் ஜூன் மாதம் தான் தாயாக போகிறேன் என கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் ரிச்சாவை வாழ்த்தி வருகின்றனர்.