வாஷிங்டன்: டிரம்புக்கு விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தினர். கனடாவில் இருந்து அந்த கடிதம் வந்ததாக முகவரியில் குறிப்பிடப்பட்டது.

கடிதத்தை சோதனையிட்ட போது அதில், ரைசின் என்ற கொடிய விஷம் தடவப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து, உளவுத்துறை தீவிரமாக விசாரணையை தொடங்கி உள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழ்நிலையில், டிரம்புக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2014ம் ஆண்டு அப்போது அதிபராக பதவி வகித்த பராக் ஒபாமாவிற்கு விஷப்பொருள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டது, குறிப்பிடத்தக்கது.