பிளஸ் 2, ஜேஇஇ தேர்வு அட்டவணையில் மத்திய அரசு குளறுபடி

சென்னை:

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வும், ஜேஇஇ தேர்வுகம் ஒரே சமயத்தில் நடக்கும் வகையில் குளறுபடியான தேர்வு அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

2017-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொது தேர்வு தேதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாவது, 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 10-ம் தேதி முடிகிறது. இதில் 16,67,673 பேர் எழுதுகின்றனர். 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 29-ம் தேதி முடிகிறது. இதனை 10, 98, 420 பேர் எழுதுகின்றன.

ஜேஇஇ தேர்வுகள் மெயின்தேர்வுகள் பிஇ/ பிடெக் முதல் தாள் ஏப்ரல் 2ம் தேதி ஆஃப்லைன் தேர்வுகள் நடக்கிறது. ஏப்ரல் 8,9ம் தேதிகளில் பிஇ/பி.டெக் ஆன்லைன் தேர்வுகள் நடக்கிறது. ஜேஇஇ பி.ஆர்க்/பி.பிளானிங் மெயின் தேர்வு இரண்டாம் தாள் ஆஃப் லைன் தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதி நடக்கிறது.

இதில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 9ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதே காலகட்டத்தில் ஜேஇஇ தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தான் ஜேஇஇ தேர்வையும் எழுத வேண்டும்.
எப்படி ஒரே காலட்டத்தில் இரு தேர்வையும் மாணவ மாணவிகள் எழுதுவார்கள்.
இதன் மூலம் அவர்களது கவனம் திசை திருப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதை திட்டமிடாமல் மத்திய அரசு செய்துள்ளது. ஏற்கனவே பணமதிப்பிறக்க அறிவிப்பை வெளியிட்டு குளறுபடியை ஏற்படுத்தி நாட்டு மக்களை திண்டாட வைத்துவிட்டு, தற்போது மாணவ மாணவிகளையும் மத்திய அரசு திண்டாடும் வகையில் ஒரு குளறுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ridiculous decision by Modi Govt...overlapping exam schedule of CBSE exams and JEE exams.., சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வும், ஜேஇஇ தேர்வுகம் ஒரே சமயத்தில் நடக்கும் வகையில் குளறுபடியான தேர்வு அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
-=-