2000ஆம் ஆண்டு ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் வெளியான படம் ‘க்ளாடியேட்டர்’.

படம் வெளியாகி 20 ஆண்டுகள் கழிந்துவிட்டாலும் இன்றளவும் வரலாற்றுப் படங்களுக்கு இப்படம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட ஐந்த ஆஸ்கர் விருதுகளையும் குவித்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை ‘க்ளாடியேட்டர்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டக் விக் உறுதி செய்துள்ளார்.