குருகிராம்

சுமார் 12 க்கும் மேற்பட்ட வாள் ஏந்திய வலது சாரி போராளிகள் இறைச்சி கடையை மூடி ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.

வட இந்தியாவில் தற்போது வசந்த நவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா நேரத்தில் வரும் நவராத்திரியைப் போலவே தற்போதும் பல இந்துக்கள் விரதம் இருந்து வழிபடுவது வழக்கமாகும். இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவோரும் முழு சைவ உணவுக்கு மாறிவிடுவார்கள். ஆயினும் இந்த நேரத்தில் பல இடங்களில் மாமிசக் க்டைகள் திறந்து இருக்கும்.

குருகிராம் நகரில் நேற்று காலை திடிரென இந்து மதத்தை சேர்ந்த வலதுசாரி போராளிகள் குருகிராம் கடை வீதிக்குள் வாள் ஏந்திய படி நுழைந்தனர். அவர்கள் அந்த வீதியில் இருந்த அனைத்து மாமிசக் கடைகளையும் வலுக்கட்டாயமாக மூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.  . கழுத்தில் காவித் துண்டுகளை அணிந்திருந்த அவர்கள் வாள்களை வீசியதால் பலரும் அஞ்சி உள்ளனர்.

அந்த பகுதியில் கடை வைத்திருந்த முனிஸ் உல் ரகுமான் என்பவர்,”காலையில் திடீரென கடைவீதிக்குள் நுழந்த அந்த கும்பல் எங்களை கடைகளை மூடச் சொல்லி மிரட்டி மூட வைத்தனர். நான் பீகார் மாநிலம்ம் தர்பங்கா சிற்றூரை சேர்ந்தவன். நாங்கள் தசரா நேரத்தில் மட்டுமே கடைகளை மூடி வந்தோம். இவ்வாறு எங்களை மூடச் சொல்லி வற்புறுத்துவது இதுவே முதல் முறையாகும்.

நான் இந்த கடை மூலம் தினம் ரூ.1000 வருமானம் பெற்று வந்தேன். தற்போது அது எனக்கு இழப்பாகி உள்ளது. எங்களை கடைகளை மூடச் சொன்னவர்களில் சிலர் எனது கடையில் இருந்து மாமிசம், கோழி ஆகியவற்றை பல முறை வாங்கி உள்ளனர்.” என வருத்தத்துடன் கூறி உள்ளார்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு கடை உரிமையாளர், “போராட்டக்காரர்கள் வாளை சுழற்றி மிரட்டி அனைத்து மாமிசக் கடைகளையும் வலுக்கட்டாயமாக மூட வைத்தனர். இங்கு இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதோர் என பலதரபட்டவர்கள் மாமிசக் கடை வைத்துள்ளனர்.

இந்த போராட்டக்காரரகள் அனைத்து மாமிசக் கடைகளையும் மூடி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.  இதனால் இஸ்லாமியர் அல்லாதோருக்கும் தினம் ஆயிரக்கணக்கில் வருமான இழ்ப்பு ஏற்படும். இந்த இழப்பை யார் ஈடுகட்டுவார்கள். இங்குள்ள மாமிசக்கடை உரிமையாளர்களுக்கு இது வாழ்வாதாரம் ஆகும். நாங்கள் இங்கு வியாபாரம் செய்தால் தான் எங்கள் வீடுகளில் அடுப்பு எரியும்” என கண்ணீருடன் தெரிவித்துல்ளார்/