புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது: ரமேஷ் போக்ரியால்

புதுடெல்லி: 

புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு முன் கடுமையான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை குறித்த பேட்டியில் நேற்று பேசிய ரமேஷ் போக்ரியால் நிஷாந்த் தெரிவித்திருப்பதாவது: அனைத்து பிராந்திய மொழிகளிலும் அதிக எண்ணிக்கையிலான மொழி ஆசிரியர்களை நியமிக்க மத்திய மற்றும் மாநில அரசு பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது, ஏனெனில் திறமையான மொழி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார், மேலும் அவர் மாநில அரசுகள் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் எந்த மொழியில் கற்பிப்பது என்று முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டுமென்ற முடிவு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளதா? இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்தை மத்திய அரசு கேட்டுள்ளதா? இதனை செயல்படுத்துவதற்கு எந்த மாநிலமாவது எதிர்ப்பு தெரிவித்துள்ளதா?

கல்வி அமைச்சகம் தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கும் போது கடுமையான ஆலோசனைகளை நடத்தி உள்ளது. பெரும்பாலான வளர்ந்த நாடுகள் தாய்மொழியில் கல்வி பயில்வதை உறுதி செய்ய தீவிர முயற்சி எடுக்கின்றனர். ஏனெனில் பிள்ளைகள் தாய் மொழியில் கருத்துக்களை மிகவும் விரைவாக கற்றுக் கொள்கின்றனர்.

ஆகவே புதிய கல்விக் கொள்கையின் படி ஐந்தாம் வகுப்பு வரையோ அல்லது எட்டாம் வகுப்பு வரையோ தாய் மொழி கல்வி பயிற்றுவிக்கப்படவுள்ளது, மேலும் இந்த முடிவை தங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பள்ளிகளில் எந்த மொழியில் கல்வி கற்பிக்க வேண்டுமென்று அந்தந்த மாநில அரசுகளால் முடிவெடுக்கப்பட்டும்.

இந்த முடிவு எப்போது செயல்படுத்தப்படும்? எல்லா பிராந்தியங்களிலும் போதுமான ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளார்களா?

இந்தியாவில் திறமையான மொழி ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, நாடுமுழுவதும் மொழி ஆசிரியர்களை நியமிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையாக முயற்சி செய்யும்.

பள்ளியிலும் உயர் கல்வியிலும் மொழிகளை வளர்ப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் இந்திய மொழிகள், இலக்கியம், கலை, இசை, தத்துவம் போன்றவற்றிலும் பல திட்டங்கள் நாடு முழுவதும் தொடங்கப்படும்.

சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்இ ஆகியவற்றுடன் இணைந்த தனியார் மற்றும் பொது பள்ளிகளிடம் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் தாய்மொழியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கேட்கப்படுமா?

இந்தக் கொள்கையின் அழகு நெகிழ்வுத்தன்மை மட்டுமே. இந்தக் கொள்கையின் நோக்கம் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட ஆணையை பின்பற்றுவதாகும். சம்மந்தப்பட்ட மாநிலத்தில் அதை முடிவு செய்வர். ஒரு துடிப்பான இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் அனைவரையும் ஈடுபடுத்த முயல்வோம்.

பாரம்பரிய இந்திய அறிவு முறைகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தேசிய கல்வி கொள்கை தெரிவிக்கின்றது, இதில் நீங்கள் எவ்வாறான திட்டத்தை சேர்க்க உள்ளீர்கள்?

இந்தியாவின் அறிவு, பண்டைய இந்தியாவின் அறிவு, நவீன இந்தியாவுக்கான அதன் பங்களிப்புகள் மற்றும் அதன் வெற்றிகள், சவால்கள் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் போன்ற இந்தியாவின் எதிர்காலத்தை உணர்த்தும் கூறுகள் துல்லியமாக இணைக்கப்படும்.

டாக்டர் கஸ்தூரிரங்கன் குழுவின் வரைவு, பிரதம மந்திரி தலைமையிலான நாட்டில் உள்ள அனைத்து கல்விகளையும் மேற்பார்வையிடுவதற்கான ஒரு உச்ச அமைப்பாக ராஷ்ட்ரிய சிக்‌ஷா அயோக்கை முன்மொழிந்தது. ஆனால் தற்போது இறுதிக் கொள்கையிலிருந்து இது ஏன் அகற்றப்பட்டது?

பல சுற்று ஆலோசனைகளை நடத்திய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநில உச்ச குழுக்களின் ஒத்துழைப்புடன், அனைத்தயும் மதிப்பீடு செய்து முடிவெடுத்துள்ளோம்.

அமைச்சகத்தின் பெயர் மனிதவள வளர்ச்சியிலிருந்து கல்வி அமைச்சகமாக ஏன் மாற்றப்பட்டது?

நாட்டில் பல இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவது இந்த அமைச்சகத்தின் முக்கியமான வேலையாக கருதப்படுகிறது, ஆகவே தான் இதன் பெயர் கல்வி அமைச்சகம் என்று மாற்றம் செய்யப்பட்டது, இப்போது இந்த அமைச்சகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் கல்வி என்பதே முக்கியமான குறிக்கோள் என்று தெரியவேண்டும்.
இவ்வாறாக கல்வியமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாந்த் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி