ந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் வரும் 26ந்தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் பரவி வரும் நிலையில், சூரிய கிரகணம் தமிழகத்தில் தெளிவாக தெரியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில் வெறும் கண்ணால் கிரகணத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சூரியன், பூமி மற்றும் சந்திரன் சரியாக அல்லது மிக நெருக்கமாக (ஒத்திசைவில்), பூமியுடன் மற்ற இரண்டிற்கும் இடையில் இருக்கும்போது மட்டுமே சூரிய கிரகணம் நிகழும். சந்திரனால், சூரியனை முழுமையாக மறைக்க இயலாது, அதுபோல,  கிரகணத்தின் போது, நிலவு சூரியனுக்கு முன்னால் நேரடியாக நகரும்.  இதனால் சூரியனை நிலவு மறைத்து கிரகணத்தை ஏற்படுத்தும்.

நிலவு மிகவும் சிறியதாக இருக்கும் காரணத்தினால் நிலாவால் சூரியனை முழுமையாக மறைக்க இயலாது. இதனால், 26ந்தேதி  நிகழவிருக்கும் சூரிய கிரகணம் ரிங் போன்ற வடிவத்தை ஏற்படுத்தும் என்றும், நிலவின் நிழலைச் சுற்றி சூரியனின் வெளிச்சம் நெருப்பு வட்டம் போல் காட்சி அளிக்கும் என்பதனால் அதற்கு ‘ரிங் ஆப் ஃபயர்’ (Ring Of Fire) என்று பெயர் வழங்கப்பட்டு இருப்பதாக விளக்கம் தெரிவித்து உள்ளனர்.

இந்த கிரகணம், ஆசிய நாடுகளில்  இந்தியா, சவுதியா அரேபியா, கத்தார், மலேசியா, ஓமன், சிங்கப்பூர், இலங்கை, மெரினா தீவுகள் மற்றும் போர்னியோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்  காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மத்திய கிழக்கு, இந்தியப் பெருங்கடல், வடமேற்கு ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் உட்பட உலகின் பிற பகுதிகளிலும் ஒரு பகுதி சூரிய கிரகணமாகக் காணப்படும்.

சூரிய கிரகணம் குறித்து நாசாவின்  தெரிவித்துள்ள வரைபடத்தின் அடிப்படையில் டிசம்பர் 26ம் தேதி நிகழும் கிரகணம் முதன்மதலாக கோயம்புத்தூரில் தெரியும். இந்த ரிங் ஆப் ஃபயர் கிரகணத் தைக் காணும் முதல் பெரிய நகரமாக கோயம்புத்தூர் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பாதையில் உள்ள மற்ற நகரங்களும் “ரிங் ஆப் ஃபயர்” கிரகணத்தைக் காண முடியும்.

இந்த சூரிய கிரகணம் காலை 8:04 மணிக்குத் தொடங்க உள்ளது.

கிரகணத்தின் முதல் பாதி காலை 9:24 மணிக்கு தொடங்குகிறது,

அதற்குப்பின் முழு கிரகணம் சந்திரன் சூரியனின் மையத்திற்கு மிக அருகில் இருக்கும்போது ரிங் ஆப் ஃபயர் கிரகணம் காலை 9:26 மணிக்குத் தொடங்கி  முழு கிரகணம் காலை 9:27 மணி வரை நீடிக்கும்,

பின் காலை 11:05 மணி அளவில் சந்திரன் சூரியனின் ஓரங்களை விட்டு விலகி அடுத்த பகுதி கிரகணத்தை முடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூரிய கிரகணத்தை மக்கள் வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மக்கள் சாதாரண சன்கிளாஸ்கள் அல்லது போலராய்டு கண்கண்ணாடிகளை பயன்படுத்தி சூரிய கிரகணத்தைப் பார்க்க வேண்டாம் என்றும் அறிவுரைக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாகச் சூரிய கிரகணக் கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது