சென்னை:

ன்று நடைபெற்ற ரிங்க் ஆப் ஃபயர் எனப்படும் ஆபூர்வ நெருப்பு வளைய சூரிய கிரகணம் தென்னிந்தியாவில், குறிப்பாக வடகிழக்கு கேரளா, ஊட்டியில் முதன்முதலாக தெரிய தொடங்கியது.  கண்களைக் கூசச்செய்த இந்த ஆபூர்வ கிரகணத்தை ஏராளமானோர் வானியல் தொலைநோக்கி மூலம் கண்டு வியந்தனர்.

இன்றைய கிரகணத்தின்போது, உலக்கை ஒன்று கட்டாந்தரையில் தன்னத்தனியே நிற்கும் அதிசய காட்சியும் வெளியாகி உள்ளது. இந்த அதிசிய  பத்திரிகைடாட் காம் வாசர்களுக்கு வீடியோவாக வெளியிட்ட உள்ளது…

30 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நடைபெறும், ஆபூர்வ நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று காலை காலை 8 மணிக்கு தொடங்கியதாகஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். சவுதி அரேபியாவின் கடல் பகுதி மற்றும் ஊட்டியில் பகுதி நேர சூரிய கிரகணம் தெரிய துவங்கியது.

சூரிய கிரகணத்தின் முதல் காட்சியை வட கேரளா அல்லது கேரளாவின் மலபார் பகுதியில் தெரிந்ததாகவும்,  கண்ணூரில் உள்ள செருவதூர் கிராமம் பகுதிதான்  கிரகணம் தெரியும் முதல் இடம் என்றும் கண்டறியப்பட்டு உள்ளது. அத்துடன்  தென்னிந்திய பகுதிகள், இந்தியா, சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,  இலங்கை, மலேசியா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் சூரிய கிரகணம் காணப்பட்டது.

சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம்.  சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்துவிட்டால் அது முழு சூரிய கிரகணம். சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து, சூரியன், நெருப்பு வளையமாக (Ring of Fire) தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் எனப்படுகிறது. இன்று நடைபெற்றது வளைய சூரிய கிரகணம்.

இந்த சூரிய கிரகணம், காலை 8.06 மணிக்கு  கிரகணம்தொடங்கியதாகவும், தமிழகத்தில் ஊட்டி,  கோவை, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் சூரிய கிரணகம் தெளிவாக தெரிந்ததாகவும், கிரகணமானது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வண்ணத்தில் தெரிந்ததாகவும், சில பகுதிகளில், ஊதா, மஞ்சள், சிவப்பு என ஒவ்வொரு நிறத்தில் காட்சியளித்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

கிரகணத்தின் போது சூரியனை நேரடியாகப் பார்க்க வேண்டாம் என்றும் கிரகணத்தைக் காண சிறப்பு நோக்கக் கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும்  விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தது உண்மையாகவே இருந்தது.

கிரகணத்தின்போது, வானில் சூரியனில் இருந்து வெளியாகும் கதிர்கள், பிரகாசமாகவும், கண்களை கூச்செய்ததுடன், வித்தியாசமான கதிர்வீச்சுகளை உமிழ்ந்தது. சாதாரணமாக வெயில் அடிப்பதற்கும், இன்று கிரகணத்தின்போது மஞ்சள் நிறத்தில் வெயில் அடித்ததும், வித்தியாசமான நிகழ்வை எடுத்துக்காட்டியது. இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் பல இடங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமலேயே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய கிரகணத்தின்போது, உலக்கை ஒன்று தன்னதனியே நிற்கும் அதிசய காட்சி… வீடியோ…

காலை 8 மணி முதல் 10.30 மணி வரை பொதுமக்கள் வெளியே தலைகாட்ட பயந்த நிலையில், அதற்கு பிறகே வேலைக்கு செல்வோர் உள்பட பலர் வெளியே தலைகாட்டத் தொடங்கினர்.

அடுத்த சூரிய கிரகணம்,  2020 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி உத்தரகாண்ட், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில்   தோன்றும் என்றும், தமிழகத்தில் 2031ம் ஆண்டு மே 21ம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.