குறைந்து வரும் சனிக்கிரக வளையம் : நாசாவின் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்

னிக்கிரகத்தை சுற்றி உள்ள வளையம் சிறிது சிறிதாக குறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் உள்ள கிரகங்களில் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு சனி கிரகத்துக்கு உண்டு. இந்த கிரகத்தை சுற்றி ஒரு அழகிய வளையம் காணப்படும். இந்த வளையம் இயற்கையிலேயே உள்ளது எனவும் பிறகு உருவானது எனவும் விஞ்ஞானிகள் இருவிதமான கருத்துக்கள் கூறி வந்தனர்.

சமீபத்தில் இந்த வளையம் இடையில் உருவானது என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அத்துடன் ஜுபிடர், யுரேனஸ் நெப்டியூன் போன்ற கிரகங்களுக்கும் ஒரு மெல்லிய வளையம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பூமியின் புவியீர்ப்பு விசையை விட சனிக்கிரகத்துக்கு அதிக புவியீர்ப்பு விசை உள்ளதாக விஞ்ஞானிகல் தெரிவிக்கின்றன.

கிரகங்களில் வியாழனுக்கு அடுத்த படியான பெரிய கிரகமான சனி கிரகத்தை சுற்றி உள்ள வளையம் சிறிது சிறிதாக குறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதே நிலையில் குறைந்துக் கொண்டு வரும் இந்த வளையம் இன்னும் 10 கோடி வருடங்களுக்கு பிறகு முழுவதுமாக மரைந்து விடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.