ரியோ டி ஜெனிரோ:
லிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.
மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில், 10 மீட்டர் பிரிவில் அமெரிக்கா முதல் தங்கத்தை வென்று பதக்க பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை
முதல் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை

இன்று காலை 4.30க்கு தொடங்கிய ஒலிம்பிக் திருவிழாவை அடுத்து, போட்டிகள் ஆரம்பமாயின. இந்தியா, அமெரிக்கா, , சீனா, உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்று உள்ளனர்.
இன்று பெண்களுக்கு நடைபெற்ற 10 மீ்ட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில், தகுதிச் சுற்றின் முடிவில் 8 வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
கடைசி சுற்றில், அமெரிக்க மற்றும் சீன வீராங்கனைகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.
இறுதியாக, அமெரிக்க வீராங்கனை விர்ஜினியா திராஷர் 108.0 புள்ளிகள் பெற்று தங்க பதக்கம் வென்றார்.
சீனா வீராங்கனை லீ டு 207.0 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
மற்றொரு சீன வீராங்கனை ஷில்லிங் 185.4 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.