தாயுடன் சிறைக்கு அனுப்பப்பட்ட 3 வயது குழந்தை இறந்ததால் காவல்நிலையம் முற்றுகை ..

தாயுடன் சிறைக்கு அனுப்பப்பட்ட 3 வயது குழந்தை இறந்ததால் காவல்நிலையம் முற்றுகை ..

கர்நாடக மாநிலம் கலபாரகி மாவட்டம் ஜெவார்கி காவல்நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலின் போது இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

கலவரம் செய்ததாகக் குற்றம் சாட்டி அந்த கிராமத்துப் பெண்ணை ஜெவார்கி போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த பெண்ணை கலபாரகி ஜெயிலில் அடைத்தனர்.

அந்த பெண்ணுடன், அவரது 3 வயது பெண் குழந்தையும் சிறையில் அடைக்கப்பட்டது.

சிறையில் அந்த குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கலபாரகி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சை பலன் இன்றி அந்த குழந்தை இறந்து போனது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், கலபாரகி  மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

-பா.பாரதி.

You may have missed