ஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது.

பாகிஸ்தானில் பதவி ஏற்கும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் போது பதவிப் பிரமாண வரிகளில் சில மாறுதல்களை செய்து சட்ட அமைச்சகம் திருத்தி அமைத்தது.   அதை மதவாதக் கட்சியான தெரிக் ஈ லொபெய்க் என்னும் பாகிஸ்தான் கட்சி கடுமையாக எதிர்த்துப் பல போராட்டங்கள் நடத்தி வருகின்றது.

இதை அங்கங்கே காவல் துறையினர் தடுத்து நிறுத்தவே நாடெங்கும் பயங்கர கலவரம் நிகழ்ந்துள்ளது.   இந்த கலவரம் கராச்சியில் துவங்கி இப்போது நாடெங்கும் பரவி உள்ளது.   இரண்டு வாரங்களாக ஆங்காங்கே மறியல் மற்றும் முற்றுகை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.     அது மட்டும் இன்றி பதட்டமான செய்திகள் பரவுவாதாகக் கூறி அனைத்து தொலைக்காட்சி சேனல்கள், வாட்ஸ்அப்,  முகநூல், ட்விட்டர், யூ டியூப் போன்ற ஊடகங்களை அரசு முடக்கி உள்ளது.