ஸ்ரீஹரிகோட்டா:

ரிசாட்-2பிஆர்1 சாட்டிலைட் இன்று விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீஹரிகோட்டாவிலுருந்து புதன்கிழமை காலை 5.30 மணிக்கு ஏவப்படும் இந்த சாட்டிலைட், மேகங்களை ஊடுருவிச் செல்லும் வல்லமை கொண்டது என இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த சாட்டிலைட்டுடன் பிஎஸ்எல்வி சி46 ராக்கெட்டும் இணைத்து அனுப்பப்படும் என்று கூறிய அவர், 5 ஆண்டுகள் விண்ணில் இயங்கும் இந்த சாட்டிலைட், 615 கிலோ எடை கொண்டது என்றார்.

இன்னும் ஓராண்டுக்குள் 5 ரிசாட் வகை சாட்டிலைட்களை அனுப்பும். ஒவ்வொரு சாட்டிலைட்டும் மாறுபட்டவை என்று தெரிவித்த சிவன், கடந்த 10 ஆண்டுகளில் 2 சாட்டிலைட்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன.

இதனை ஈடு செய்யவே 5 சாட்டிலைட்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.