ஒரு இன்னிங்சில் 6 கேட்ச் பிடித்து அசத்திய விக்கெட் கீப்பர் ரிஷப்!!

ஒரு இன்னிங்சில் அதிக கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர்களின் வரிசையில் ரிஷப் பண்டும் இணைந்துள்ளார். ஒரு இன்னிங்சில் ஆறு கேட்ச் பிடித்த ரிஷப் பண்ட் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

rishabhpan

இந்தியா – ஆஸ்திரேகியா அணிக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலியா 235 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 15 ரன்கள் முன்னிலை வகித்தது.

இந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் முன்னணி வீரர்கள் ஏமாற்றம் அளிக்க புஜாரா சிறப்பாக விளையாடி சதம் கடந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எட்டமுடிந்தது. எனினும், பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். இஷாந்த் சர்மா, பும்ரா மற்றும் அஸ்வின் பந்து வீச்சால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

அதேபோல் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் நெருக்கடியான தருணங்களில் ஆஸ்திரேலிய வீரர்களை அவுட்டாக்கி அனைவரையும் கவர்ந்தார். இந்த ஒரே இன்னிங்சில் ஆறு பேரை கேட்ச் பிடித்து அவுட்டாக்கி ரிஷப் பண்ட் அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்திய விகெட் கீப்பர்களில் ஒரு இன்னிங்சில் அதிக கேட்ச் ( 6) பிடித்த தோனியின் சாதனையை ரிஷப் சமன் செய்துள்ளார்.

இதற்கு முன்பாக 2009ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனி ஒரு இன்னிங்சில் 6 கேட்ச் பிடித்தது குறிப்பிடத்தக்கது.