’பேட்ட’ ரஜினி ஸ்டைலில் ரிஷப் பண்ட்க்கு பதிலடி கொடுத்த தோனி!

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணியில் இடம் பெற்ற ரிஷப் பண்ட்டுக்கு தோனி சவால் விடும் விதமாக சிஎஸ்கே சார்பில் டிவிட்டரில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ரிஷப் பண்டை ‘ அடிச்சு அண்டர்வேரோடு ஓட விட்டுருவேன்’ என கூறும் பேட்டப்படத்தின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

ipl

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணிக்கு என்று ரசிகர்கள் பட்டாளமே உண்டு. எனினும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போது, மைதானத்தில் ரசிகர்களின் விசில் பறக்கும். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

dhoni

இந்நிலையில் டெல்லி கேப்பிடல் அணியில் இடம்பெற்றுள்ள விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட் தற்போது ஐபிஎல் போட்டியை விளம்பரப்படுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விளம்பரத்தில், “ தோனி என் குரு போன்றவர். அவர் இல்லை எனில் நான் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாகி இருக்க முடியாது. இந்த முறை சென்னை அணிக்கு எதிராஅக விளையாடும் போது கூல் கேப்டன் என்று கூறப்படும் தோனி கூலாக இருக்க முடியாது. மஹி அண்ணா ரெடியா இருங்க என் ஆட்டத்த பாக்க “ என்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி பதில் அளிப்பது போல் டிவிட்டரில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ அடிச்சு அண்ட்ரவேரோடு ஓட விட்டுருவேன். மானம் போனா திரும்ப வராது” என பேட்ட படத்தில் வரும் ரஜினி கூறும் வசனத்தின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.