சாயங்காலம் சரக்கு கடைகளை திறக்க ரிஷிகபூர் யோசனை….

மும்பை

தினமும் மாலை வேளையில் மதுக்கடைகள் திறக்கலாம் என இந்தி நடிகர் ரிஷிகபூர் கூறி உள்ளார்.

21 நாள் ஊரடங்கு உத்தரவால் இந்தியா முழுக்க மதுக்கடைகளையும் அடைத்து விட்டார்கள்.

கொரோனாவை நினைத்து மனது ஒரு பக்கம் நடுங்கி கொண்டிருக்க, ’ஆல்கஹால்’ இல்லாமல் குடிமகன்களின் கைகளும் நடுக்கம் கண்டுள்ள  நிலையில்- மும்பையில் இருந்து அவர்களுக்கு ஆதரவாக ஒரு குரல் ஒலித்துள்ளது.

குரல் எழுப்பியிருப்பவர், இந்தி நடிகர் ரிஷிகபூர்.

‘’கொரோனாவால் வீட்டிலேயே நாள் முழுக்க முடங்கி கிடந்து ஜனங்களுக்கு மனஅழுத்தம் உண்டாகிறது.

போலீசார், டாக்டர்கள் உள்ளிட்டோருக்கும் சோர்வு ஏற்படுகிறது.

தப்பாக நினைக்க வேண்டாம். அவர்களுக்காக மாலையில் மட்டும் சில மணி நேரம் மதுக்கடைகளை திறக்கலாம்’’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில், ரிஷிகபூர் மனம் திறந்துள்ளார்.

குடிமக்களிடம் இவர் காட்டும் கரிசனம், வேறு சிலரை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

‘பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் ரிஷி.. இப்படி எல்லாம் ஐடியா கொடுக்க வேண்டாம்’’ என்று வலைத்தளங்களில் சிலர் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

= ஏழுமலை வெங்கடேசன்