புதிய சிபிஐ இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா பதவி ஏற்றார்

டில்லி:

புலனாய்வு நிறுவனமான சிபிஐக்கு புதிய இயக்குராக ஐபிஎஸ் அதிகாரி ரிஷிகுமார் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்றுஅவர் தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.

டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வந்த அவரை இடைக்கால சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் உள்பட சிபிஐ அதிகாரிகள் அழைத்து வந்தனர்.  அதைத்தொடர்ந்து ரிஷிகுமார் சுக்லா  சிபிஐ இயக்குனராக பதவி ஏற்றார்.

ஏற்கனவே சிபிஐ இயக்குனர்களாக இருந்த  அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருவரையும் கட்டாய விடுமுறை மூலம் வெளியேற்றிய மத்திய அரசு புதிய இயக்குனரை தேர்வு செய்தது.

இதற்காக பிரதமர் மோடி  எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும்  உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான தேர்வு கமிட்டி 3 முறை ஆலோசனை செய்த நிலையில், இறுதியாக சிபிஐ-யின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லாவை கடந்த 2ந்தேதி  நியமனம் செய்து அறிவித்தது.

இந்த நிலையில் டில்லியில் உள்ள தனது அலுவலகம் வந்த ரிஷிகுமார் சுக்லாவை, இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் உள்பட சிபிஐ அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து சுக்லா பதவி ஏற்றுக்கொண்டார்.

ரிஷிகுமார் சுக்லாவின் பதவி காலம் 2 ஆண்டுகள். இவர்  1983-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பதவி வென்று, மத்திய பிரதேச மாநிலத்தில் டிஜிபியாக பணியாற்றியவர்.