பிரிட்டன் அரசில் முன்னுரிமை பெறுகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்…

ண்டன்

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சன் தற்போது  சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பிரதமரின் அதிகார  அலுவலகப் பணிகளை மேற்கொள்ள உள்ளோரின் பட்டியலில்  இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இடம் பெற்றுள்ளார்.

பிரிட்டனின் நிதித் துறை அமைச்சராக  திறம்பட செயலாற்றி வரும் 39 வயதே நிரம்பிய ரிஷி சுனக்,  இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார்.

பிரிட்டனில் உயர் அதிகாரப் பணி என்பது 3 நிலைகளைக் கொண்டது.  பிரதமர்,  வெளியுறவுத் துறை,  நிதித்துறை ஆகிய படிநிலைகளைக் கொண்டது.  அதனடிப்படையில் இம்மாதம் 5 ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர், டொமினிக் ராப் பிரதமர் அலுவலகப்  பணிகளை மேற்கொண்டார்.

அவருடனோ அல்லது அவரின் விடுப்பு விலகலை அடுத்தோ சுனக்  அப்பொறுப்பை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…