கலிபோர்னியா:

அமெரிக்காவில் முக்கிய அணை ஒன்று  உடையும் அபாயத்தில் இருப்பதால், 2 லட்சம் பேர் பாதுகாப்புக்கான இடங்களுக்கு  அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றிருக்கும் கணினி தொழில் நுட்ப பொறியாளர்கள் கலிபோர்னியா மாகாணத்தில்தான் அதிகளவில் வசிக்கின்றனர்.

இந்த மாகாணத்தில் ஓரோவில்லே என்ற ஏரியின் குறுக்காக 770 அடி உயரத்தில் ஓரோவில்லே என்ற அணை கட்டப்பட்டுள்ளது.  7 ஆயிரம் அடி அகலத்தில் பரந்து கிடக்கும் இந்த அணை  நீர்மின் உற்பத்திக்கும் குடிநீர்த் தேவைக்காகவும் பயன்பட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன் இந்த அணை இருக்கும் பகுதியில் கனமழை பெய்ததால், ஓரோவில் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. தண்ணீர் வரத்து அதிகரிப்பால் அணையின் வலு குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

எந்த நேரமும் உடையும் அபாயம் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு லட்சம் பேர் பள்ளமான இடங்களிலிருந்து வெளியேறி  பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியா மாகாண ஆளுநர் ஜெர்ரி பிரவுன் அவசரகால உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள உள்ளூர் மக்களுக்கு தேவையான உதவி களை வழங்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.