வாஷிங் மெஷின் இல்லாததால் கையால் துணியை வெறித்தனமாக துவைக்கும் ரித்திகா சிங்…..!

கொரோனா லாக்டவுன் மக்கள் அனைவரது வாழ்க்கையையும் புரட்டி போட்டுவிட்டது.

சினிமா துறையும் இயங்காமல் முழுமையாக முடங்கிவிட்டதால் சினிமா நடிகர்களும் தங்கள் வீடுகளிலேயே நேரத்தை போக்கி வருகின்றனர்.

வீட்டை சுத்தம் செய்வது தொடங்கி, துணி துவைப்பது, சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது போன்ற வற்றை கூட வீடியோ எடுத்து வெளியிடுகின்றனர்.

அந்த வகையில் தற்போது ரித்திகா சிங் தான் வீட்டில் இரண்டு வகையாக துணி துவைத்த வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல் வீடியோவில் அமைதியாக துணியினை கீழே வைத்து சோப்பு போட்டு துவைக்கிறார், இரண்டாவது வீடியோவில் வெறித்தனமாக அந்த துணியினை தூக்கி போட்டு அடித்து துவைக்கிறார் ரித்திகா.