சௌதி : ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்ட கைதிகளின் தற்போதைய நிலை

ரியாத்

ழல் குற்றம் சாட்டப்பட்டு ஓட்டலில் அடைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் இளவரசர்களில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் ஊழல் செய்த அரசு அதிகாரிகள் மற்றும் இளவரசர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்.  அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ரியாத் நகரில் உள்ள சொகுசு ஓட்டலான ரிட்ஸ் கார்ல்டன் ஓட்டலில் காவல் வைக்கப்பட்டனர்.  அந்த ஓட்டல் கிட்டத்தட்ட ஒரு வசதியான சிறையாக இருந்தது.

இந்த ஓட்டலில் இளவரசர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், உள்ளிட்ட பலர்  காவலில் இருந்தனர்.   அதன் பிறகு கைது செய்யப்பட்டவர்களிடம் பெரும் தொகை  அபராதமாக வசூலிக்கப்பட்டது.   அவ்வாறு அபராதம் செலுத்தியவர்களில் பலர் விடுதலை செய்யப்படனர்.   அவர்களில்  சிலருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளிநாட்டுப் பயணம் சென்றிருந்த பட்டத்து இளவரசர் தமது நாட்டில் தற்போது ஊழல் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டதாகவும்  வெளிநாட்டினர் வர்த்தகம்  செய்ய ஏதுவான சூழல் நிலவுவதாகவும் தெரிவித்தார்.    அத்துடன் சௌதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் அளிக்கப் பட்டுள்ளது.   திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.

அனைத்தையும் விட முன்பு சிறையாக இருந்த ரிட்ஸ் கார்ல்டன் ஓட்டல் மீண்டும் பொதுமக்கள் தங்கும் ஓட்டலாகி உள்ளது.