Random image

” 2020 க்குள் கங்கை நதி முழுவதுமாக தூய்மை அடையும் ”- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

2020க்குள் கங்கை நதி முழுவதுமாக தூய்மை செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ganga-river

டெல்லியில் இந்திய வர்த்தக சம்மேளன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 2020ம் ஆண்டிற்குள் கங்கை நதி முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு தூய்மையடையும் என தெரிவித்துள்ளார். கங்கை நதியை தூய்மை படுத்துவதற்காக 221 திட்டங்கள் ரூ.22,238 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

முதற்கட்ட வேலையாக ’ நம்ம கங்கை மிஷன் ’ என்ற செயல்முறை திட்டத்தின் மூலம் 221 திட்டங்கள் முடிந்துள்ளதாக கூறும் நிதின் கட்கரி, 2019ம் ஆண்டில் பெரும்பாலான 80 சதவிகித தூய்மைப்பணிகள் நிறைவடையும் என கூறியுள்ளார். கங்கை நதியை தூய்மைப்படுத்துவது கடினமான ஒன்று என்றாலும், அரசு தொடர்ந்து அதனை பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கங்கை நதியை தூய்மைப்படுத்துவது கடினமாக செயல் என்றாலும் கூட அதன் கிளை நதிகளும் பராமரிக்கப்படப் உள்ளன என்று நிதி தெரிவித்தார்.

இவை அனைத்தும் தனியார் நிறுவனக்கள் மூலம் செய்து வரப்படுகின்றன. அனைத்து திட்டங்களுக்கும் அரசை சார்ந்து இருக்க முடியாது, நாங்களாகவே யாரையும் இதில் ஈடுபடுத்த வில்லை. கொடுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு ஏற்றார்ப்போல் சில தனியார் நிறுவனங்கள் முன்வந்து இந்த பணியை செய்து வருகிறது. இதில் அரசாங்கத்தின் ஈடுபாடு எதுவும் இல்லை.

நம்ம கங்கை மிஷன் திட்டம் மூலம், உத்ராகண்ட், மேற்கு வங்கம், பீகார், உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் மாசுக்கட்டுப்பாட்டை குறைக்கவும், சுகாதார வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதின் கட்கரி குறிப்பிட்டார்.