மதுரை:

தமிழக ஆறுகளில் மணல் அள்ளுவது அடுத்த 3 ஆண்டுகளில் முற்றிலும் நிறுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மதுரை ஆரப்பாளையத்தில் இன்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி பேசுகையில், ‘‘அடுத்த 3 ஆண்டுகளில் ஆற்றில் மணல் அள்ளப்படுவது முற்றிலும் நிறுத்தப்படும். தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை இனி அரசே ஏற்று நடத்தும்.

ஆற்று மணலுக்கு பதிலாக இனிமேல் மக்கள் எம்.சாண்ட் எனப்படும் குவாரி மணலை பயன்படுத்த வேண்டும். மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டால் நிலத்தடி நீர் உயரும். இதன்மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார்.