நதிநீர்ப் பிரச்சனை: மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி எதிர்ப்பு

சென்னை,

திநீர்ப் பிரச்சனைகள் குறித்து விசாரிக்க நிரந்தர தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புககு தமிழக முதல்வர் எடப்பாடி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.

மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்  பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் நிரந்தர தீர்ப்பாயம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. தொடர்ந்து அதற்கான  மசோதா கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் கடந்த மே மாதம் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த விஷயம் குறித்து பரிசீலனை செய்த தமிழக முதல்வர் இன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரிக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதி உள்ள கடிதத்தில், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிரந்தர தீர்ப்பாயம் அமைக்க தேவையில்லை. ஏற்கனவே உள்ள தீர்ப்பாயமே போதுமானது என்றும், இதுவரை விசாரித்து வந்த தீர்பாயத்திற்கே அனைத்து விவரங்களும் தெரியும் என்பதால், வேறு புதிய தீர்ப்பாயம் தேவையில்லை  என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நதிநீர் பிரச்சினையில், தமிழக அரசு ஏற்கனவே  எடுத்த நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும்,  இது தொடர்பான மசோதாவை மக்களவையில் நிறைவேற்றக்கூடாது.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.