டில்லி:

ராஜஸ்தானில் தண்ணீர் சேகரிப்பு தொழில்நுட்ப பணியில் ஈடுபட்டுள்ள ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் கூறுகையில், ‘‘நதிகள் இணைப்பு திட்டத்தில் மோடி அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் அதிர்ச்சி அளி க்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘இது நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும். இதன் மூலம் அதிகளவிலான மக்கள் இடமாற்றத்தை சந்திக்க நேரிடும். ஒருபுறம் வெள்ளம் மற்றும் மற்றொரு புறம் வறட்சி என எதிர்பாராத பாதிப்புகளை நாடு சந்திக்க நேரிடும்.

ஆறுகள் சாலைகளை போன்றது கிடையாது. ஆற்றுக்கு என மரபு ரீதியிலான குளம், சொந்த வாழ்க்கை உள்ளது. ஆற்றுடன் நமது இருதயம், மூளையை இணைக்க வேண்டும். நீர் சேகரிப்பு திட்டங்களை உள்ளூர் மக்களுடன் ஏற்படுத்த வேண்டும். நதிகள் இணைப்பு என்பது நீர் ஆதாரங்களை தனியார் மயமாக்க வழிவ குக்கும்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘கடந்த 2002ம் ஆண்டு பாஜ அரசால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். அடுத்து அமைந்த ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் இவர் தனது ஆய்வு அறிக்கையை சமர்பித்தார். அதன் பிறகு மோடி அரசில் தான் இது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது’’ என்றார்.

இது குறித்து சிங் கூறுகையில், ‘‘கடந்த 2009ம் ஆண்டு முதல் கங்கை நதி பாசன ஆணைய உறுப்பினராக இருந்தேன். புதிய அரசு அமைந்தவுடன் அப்பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டேன். அவர்கள் நாங்கள் எழுப்பிய கவலைகளை கவில்லை. மோடி அரசில் எதிர்ப்புகள் அனுமதிக்கப்படுவது கிடையாது’’ என்றார்.

உ.பி ஜமீந்தார் குடும்பத்தை சேர்ந்த இவர் தன்னை சுற்றியுள்ள வாழ்க்கை முறை குறித்து ஆசிரியர், விவசாயிகளிடம் தொடர்ந்து கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும், அவர் கூறுகையில், ‘‘ எனது தந்தை எனக்கு எவ்வித சுதந்திரத்தையும் அளிக்கவில்லை. நான் எனது கல்வியை முடித்தவுடன் அரசுப் பணியில் சேர்ந்தேன்.

எனக்கு என் தந்தை உடனடியாக திருமணம் செய்து வைத்துவிட்டார். 1984ம் ஆண்டு எனது மகன் பிற ந்தான். அப்போது எனது மனைவி அவரது வீட்டிற்கு சென்றபோது எனது பணியை ராஜினாமா செய்தேன். ஜெய்ப்பூரில் பஸ் ஏறி கடைசி நிறுத்தத்திற்கு டிக்கெட் எடுத்தேன்’’ என்றார்.

கோபால்புரா பகுதியில் உள்ள கிஷோரி கிராமத்தில் இறங்கிய அவர் அங்கு சிறிய மருத்துவமனையை தொடங்கினார். ஆனால் அங்கு பணியாற்றி வந்த 72 வயது மங்குமீனா என்பவர் இந்த கிராம மக்களுக்கு கல்வி, மருத்துவத்தை தவிர தண்ணீருக்கான தேவை தான் அதிகமாக உள்ளது என்று கூறினார். மேலும் அவர் கிணற்றுக்கு அடியில் உள்ள நீராதாரம் குறித்து என்னிடம் எடுத்துக் கூறினார். இவற்றை புதுப்பிக்கும் முறையையும் அவர் எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும், இவர் நிலத்தில் நீர் சேகரிப்பு மையங்கள், அணைகள் போன்றவற்றை அமைத்து ஈரமான பருவத்தில் நீர் சேகரிப்பை அதிகப்படுத்தவும், நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரித்து கோடை காலத்தில் உதவும் வகையில் நடவடிக்கை எடுத்தார். ஆற்றின் ஓரத்தில் வசிக்கும் மக்களையும் இந்த பணியில் பங்கேற்க செய்து அவர்களை நீராதரங்களின் உரிமையாளர்களாக மாற்றினார்.

30 ஆண்டுகள் கழித்து இந்த திட்டம் ராஜஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவியுள்ளது. இதனால் கிராமங்கள் கோடை காலத்தில் அதிகப்படியான தண்ணீருடன் இருக்கும் நிலையை ஏற்பட்டுள்ளது. இதற்காக இவர் பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.