ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கும் ‘எல்.கே.ஜி’: அறிவிப்பு வெளியானது

சென்னை:

பிரபல வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகரும், தற்போதைய ஐபிஎல் வர்ணனையாளருமான ஆர்.ஜே. பாலாஜி, மகளிர் அணித் தலைவி. என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

தற்போது ஆர்ஜே பாலாஜி  பல படங்களில் முன்னணி காமெடியனாக கலக்கி வருகிறார். ஐபிஎல் தொடரின் தமிழாக்க வர்ணனையும் செய்து வருகிறார். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

சமீப சில நாட்களாக ஆர்ஜே பாலாஜி அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின.அதன்கான சுவர் விளம்பரம் ஒன்று வெளியாகி சமூகவலைதரளங்களை அதகளப்படுத்தியது.

இந்நிலையில்,  ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் ‘எல்கேஜி’. அரசியல் படமான இதில் ஆர்ஜே பாலாஜி முழுநேர அரசியல்வாதியாக நடிக்கிறார்.. ‘எல்கேஜி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

அரசியல் படமான ‘எல்கேஜி’ படத்தில் ஆர்ஜே பாலாஜி அரசியல்வாதியாக நடிக்கிறார். இந்தப் படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சேர்மன் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தை பிரபு என்பவர் இயக்குகிறார்.

படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகி உள்ளார்.   தனது கட்சியின் மகளிர் அணித் தலைவி ப்ரியா ஆனந்த் என்று ஆர்ஜே பாலாஜி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

ஏற்கவே வெளியான பரபரப்பு சுவர் விளம்பரம்

சி ஃபார் கமிஷன்ஆர்ஜே பாலாஜிக்கு ப்ரியா ஆனந்த் அரசியல் பாடம் சொல்லிக் கொடுப்பது போலவும் ஏ ஃபார் அரசியல், பி ஃபார் பினாமி மற்றும் சி ஃபார் கமிஷன் என்று கரும்பலகையில் எழுதியிருப்பது போன்றும் ஒரு புகைப்படத்தை ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ளார்.