ஆயுஷ்மான் குரானாவின் ‘பதாய் ஹோ’ இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்யும் ஆர்.ஜே.பாலாஜி…!

2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. ரூ.29 கோடி செலவில் முழுநீள காமெடி திரைப்படமாக உருவான இப்படம், ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்தப் படத்தை தமிழில் இயக்க ஆர்.ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளார். இதனை டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் உறுதிப்படுத்தியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

டைட்டில் இறுதி செய்யப்பட்ட பின்னர் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.