Random image

ராஞ்சி மருத்துவமனையில் மன அழுத்த நோயால் லாலு அவதி

ராஞ்சி:

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மன அழுத்த நோயால் அவதிப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. உடல் நலக் குறைவு காரணமாக ஜார்கண்ட் ராஞ்சியில் உள்ள ரா«

ஜந்திரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘‘அங்கு அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். மன நல மருத்துவர்கள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை அதிகரித்துள்ளது’’ என்று நேற்றிரவு மருத்துவமனை இயக்குனர் ஸ்ரீவத்சவா வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த அறிக்கையில்,‘‘கடந்த சனிக்கிழமை முதல் லாலுவின் செயல்பாடு வழக்கத்திற்கு மாறாக உள்ளது. அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சிறிய அளவிலான மன அழுத்தம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கால்களில் ஏற்பட்டுள்ள வீக்கம் காரணமாக அவரால் ஒழுங்காக நடக்க முடியவில்லை.

அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு மருத்துவமனையில் உள்ள மன நல வல்லுனர்கள் மூலம் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் கூறும் பரிந்துரைப்படி அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் பிர்ஸா முண்டா மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதோடு மும்பையில் உள்ள ஆசிய இருதய இன்ஸ்டிடியூட் மருத்துவர்களுடன் தொடர்நது தொடர்பில் உள்ளோம். அவர்களுக்கு குறிப்பிட்ட நேர இடைவெளியில் உடல் நிலை குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.