பாட்னா :
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் ‘மெகா கூட்டணியை’’ உருவாக்கியுள்ளன.
அந்த கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்ததால், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் ஆர்.ஜே.டி. தற்காலிக தலைவர் தேஜஸ்வி யாதவும் முதல் கட்டமாக பேச்சு நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த நிலையில், ஊழல் வழக்கில் ராஞ்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், மெகா கூட்டணியில் யார் ? யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஒரு பட்டியலை தயார் செய்தார். ஒரு துண்டு சீட்டில் தொகுதிகள் எண்ணிக்கையை குறிப்பிட்டு தனது தூதர் போலோ யாதவ் மூலம் கொடுத்து அனுப்பினார்.
ராஞ்சியில் இருந்து நேற்று பாட்னா வந்த அந்த தூதர், லாலுவின் துண்டு சீட்டை தேஜஸ்விடம் அளித்ததும், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. அதன் விவரம்:
ஆர். ஜே. டி.: 144
காங்கிரஸ்: 70
சி.பி.எம்.எல்.:19
சி.பி.ஐ: 6
சி.பி.எம்.:4
இது தவிர மக்களவை இடைத்தேர்தல் நடைபெறும் வால்மீகிநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் முதல்-அமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ், அறிவிக்கப்பட்டார்.
-பா.பாரதி.