பாட்னா: தற்போதைய நிலவரப்படி, பீகார் சட்டசபை வாக்கு எண்ணிக்கையில், லாலுவின் ஆர்ஜேடி கட்சி, பாரதீய ஜனதாவைவிட அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாரதீய ஜனதாவின் அனைத்து தேர்தல் விளையாட்டுகளையும் மீறி, அக்கட்சி சாதித்துள்ளது எனலாம்.

தற்போதைய நிலவரப்படி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் 74 இடங்களிலும், பாரதீய ஜனதா 72 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

சிராக் பஸ்வானின் கட்சி ஒரு இடத்தில்கூட முன்னிலை வகிக்கவில்லை. இதர சிறிய கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் 33 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், தற்போதைய நிலவரப்படி, பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 115 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆர்ஜேடி கூட்டணியும் 110க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.