சென்னை :

ர்கே நகர் தேர்தல் அதிகாரி முன்பு தீபன், சுமதி  ஆகியோர் வாக்குமூலம் அளிக்கும் வீடியோவை பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள விஷால், “இது ஜனநாயகத்தின் இன்னொரு கேலிக்கூத்து” என்று தெரிவித்துள்ளார்.

தீபன் – விஷால்

விஷாலின் மனுவை முன்மொழிந்ததாக்க்  கூறப்பட்டவர்களில் தீபன், சுமதி ஆகிய இருவரும், தாங்கள் மனுவில் கையெழுத்திடவில்லை என்றும் தங்களைப்போல வேறு யாரோ  போலி கையெழுத்து இட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்..

அனால் தீபன், சுமதி இருவரும் மிரட்டப்பட்டதாக விஷால் தொடர்ந்து கூறி வந்தார். இதற்கான ஆடியோ ஆதாரத்தையும் விஷால் வெளியிட்டார். மேலும், தேர்தல் அதிகாரியிடமும் இது குறித்து புகார் அளித்தார்.

இதனையடுத்து தேர்தல் அதிகாரி முன்னர் இருவரையும்  ஆஜர்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.  ஆனால் அவர்கள் தலைமறைவாகிவிட்டதாக விஷால் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே தீபன், சுமதி இருவரும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி முன்னர் இன்று வாக்குமூலம் அளித்தனர். அப்போது அவர்கள், “விஷாலை முன்மொழிந்தவர்களின் பட்டியலில் எங்கள் கையெழுத்து கிடையாது. போலியாக யாரோ கையெழுத்திட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தனர்.

இவர்கள் போசிய வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவு குறித்து விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்திட்டிருக்கிறார்.

அதில், “இது இன்னொரு ஜனநாயக கேலிக்கூத்து. தேர்தல் அதிகாரி முன்னர் வாக்குமூலம் அளிக்கும் தீபன் தான் போட்ட கையெழுத்தை தன்னுடையதல்ல என்று சொல்கிறார்” என்று விஷால் பதிவிட்டுள்ளார்.