ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: காவல் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்

சென்னை,

ஆர்.கே. நகர் தொகுதியில் இத் காவல் ஆய்வாளர்கள் 5 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைக்கு வரும் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

தொகுதி முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிமீறல் நடைபெறுகிறதா என பறக்கும் படையினரும் கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட பகுதி  காவல் ஆய்வாளர்கள் 5 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்.கே. நகர் காவல் ஆய்வாளர் ஜெயராஜ் பட்டினப்பாக்கம் காவல் ஆய்வாளராகவும், கட்டுப்பாட்டு அறையில் இருந்த கொடிராஜ் ஆர்.கே. நகர் குற்றப்பிரிவு ஆய்வாளராகவும் நியமித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.