சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த தேர்தலில் அதிமுக மீண்டும் இட்டை இலை சின்னத்துடன் களமிறங்கு கறிது. மதுசூதனனுடன் அவருக்கு எதிராக செயல்பட்டு வந்த  அமைச்சர் ஜெயக்குமார் உடன் வந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்.கே. நகர் தொகுதியில், டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்து, இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. வரும் 4ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

மதுசூதனன் வேட்புமனு தாக்கல் செய்வதையடுத்து ஏராளமான அதிமுகவினர் தண்டையார் பேட்டையில் கூடினர்.  அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு, அமைச்சர் ஜெயக்குமார், பாலகங்கா, மயிலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நடராஜ்  உள்பட ஏராளமானோர் வந்திருந்தனர்.

சற்று முன்பாக  திமுக மருதுகணேஷ் , டிடிவி தினகரன் ஆகியோர்  வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், தறபோது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மதுசூதனன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவருடன் வடசென்னை அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு, அமைச்சர் ஜெயக்குமார், உள்பட 5 பேர் சென்றனர்.

அங்கு தேர்தல் நடத்துல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் மதுசூதனன். சரியாக 1.30 மணி அளவில் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த தேர்தலில் அதிமுக மீண்டும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனு தாக்கல்செய்ய டிசம்பர் 4-ம் தேதி இறுதி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 5-ம் தேதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 7-ம் தேதி கடைசிநாள். வாக்குப்பதிவு டிசம்பர் 21ந்தேதி நடைபெறுகிறது.