சென்னை:

ஆர்.கே. நகர் பிரசாரத்துக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நபர்களை பிரசாரத்துக்கு அழைத்துச் சென்றதால், அந்த வேட்பாளரின் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது அந்த தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆர்.கே. நகர் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, தேர்தல் பிரசாரத்துக்கு வேட்பாளர்களுடன் செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறித்து முன்கூட்டியே தேர்தல் அலுவலரிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என்றும், அனுமதி பெறப்பட்ட நபர்களை விட கூடுதல் நபர்களை அழைத்து சென்றால், பிரசாரம் ரத்து செய்யப்படும். அதற்கு பிறகு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்படாது என்று கூறினார்.

மேலும், வரும் 12ம் தேதிமுதல் ஆர்.கே. நகர் தொகுதியில்,  பூத் சிலிப் வழங்கப்படும் என்றும், தேர்தல் பாதுகாப்புக்கு து ணை ராணுவப்படை டிசம்பர் 12ம் தேதியன்று தொகுதிக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.