ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா: மத்திய, மாநிலஅரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு!

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான திமுக வேட்பாளர் மருது கணேஷ் தொடர்ந்த வழக்கில்,  மத்திய, மாநில அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு  ஐகோர்ட்டு அமர்வு நோட்டீசு அனுப்பி உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக, தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட மருதுகணேஷ் தொடர்ந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த உயர்நீதி மன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு , அதை   உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்தார்.

இந்த வழக்கில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது நடைபெற்ற  பணப்பட்டுவாடா புகார் குறித்து வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தல் தேதி அறிவிக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை  மத்திய அரசு,  மாநில அரசு, தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை ஆகியவை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது.  ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: RK Nagar by-election money distribution: Chennai Highcourt Notice to the central and state government and election commission, ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா: எடப்பாடி, மாநிலஅரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு!
-=-