ஆர்.கே.நகர் தேர்தல்: விஷாலின் வேட்புமனு நிறுத்தி வைப்பு!

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கி உள்ள நடிகர் விஷாலின் வேட்பு மனு, திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் எதிர்ப்பின் காரணமாக மனு பரிசீலனை  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி உள்பட சுயேச்சையாக  டி.டி.வி. தினகரன், ஜெ.தீபா,   நடிகர் விஷால் உள்பட 100க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று வேட்புமனு பரீசீலனை தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரியால் நடத்தப்பட்டது.

அதில், அதிமுக, திமுக, பாஜக, டிடிவி தினகரன் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விஷாலின் மனு குறித்து பரிசீலிக்கப்பட்டபோது, அதிமுக, திமுக வேட்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் உள்ள  பிரமாணப் பத்திரத்தில் பல விவகாரங்கள் தவறுதலாக கூறப்பட்டு உள்ளதாகவும், பல விஷயங்கள் மறைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினர்.

அவரது மனுவை முன்மொழிந்தவர் பெயர்,  ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, நடிகடல விஷால் வேட்பு மனுபரிசீலனை தற்பொழுது நிறுத்தி வைக்கப்படுவ தாகவும், மீண்டும்  தேர்தல் பார்வையாளர்கள் முன்னலையில் பரிசீலனை மீண்டும் நடைபெறு மென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.