ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 74.5% வாக்குப்பதிவு

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 74.5 சதவித வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணிக்குள் வந்தவர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். மாலை 5 மணி நிலவரப்படி 74.5 சதவித வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

84 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க மேலும் 5 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 174 வாக்குச்சாவடிகளில் முழுமையாக வாக்குப்பதிவு நிறைவு பெற்று உள்ளது.