ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மத்திய அரசு முடிவு செய்யும்!! தேர்தல் ஆணையம்

டெல்லி:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒரு ஆண்டுக்குள் அல்லது மத்திய அரசின் ஆலோசனை அடிப்படையிலோ தேர்தல் நடத்தப்படும்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதியில் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று விதி இருந்தாலும், பல்வேறு காரணங்களால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டால் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று தேர்தல் நடத்தலாம் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்,1951 விதி 151 பிரிவு ஏ அல்லது பி யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒராண்டுகுள்ளோ அல்லது மத்திய அரசின் ஆலோசனை அடிப்படையிலோ தேர்தல் நடத்தப்படும். ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், தங்கள் டெபாசிட் தொகையை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விண்ணபித்து 15 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததுள்ளது.