சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளஅரசு ஊழியர்களுக்கு இனறு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. 4 கட்டங்களாக நடைபெற உள்ள இந்த பயற்சி வகுப்பு குறித்து  மாவட்ட தேர்தல் அதிகாரியான கார்த்திகேயன் அறிவித்து உள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பணிகளில் ஈடுபட 1638 மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு தேர்தல் குறித்த முதல்கட்ட பயிற்சி முகாம் இன்று நடைபெறும் என்று ஏற்கனவே  மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வரும் டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குச் சாவடிகளில் பணி யாற்ற வுள்ள மத்திய, மாநில அரசு அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு நவம்பர் காலை 9 மணிக்கு வண்ணாரப்பேட்டை அரசு தொழில் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

தேர்தல் நடத்தும் விதம், வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, அடையாள மை வைப்பது போன்ற பணிகள் குறித்த பயிற்சி வகுப்புகள் நவம்பர் 30, டிசம்பர் 8, 16, 20 என 4 கட்டங்களாக நடைபெறவுள்ளன.

தேர்தல் பணியின் அவசரம், அவசியம் கருதி அனைவரும் பயிற்சி முகாமில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.  கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்  வாக்குப்பதிவின்போது 50 மையங்களில் உள்ள 256 வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் 307 பேர்,  அலுவலர் 1, 2, 3 நிலையில் தலா 307 பேர்,

1,400 வாக்காளர்களுக்கு அதிகம் உள்ள வாக்குச்சாவடிகளில் அலுவலர் 4 நிலையில் 103 பேர், வாக்கு ஒப்புகைச் சீட்டு வழங்க 307 பேர் என மொத்தம் 1,638 மத்திய, மாநில அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.